தமிழ் திரைத்துறையில் நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகம் கொண்டு பணியாற்றி பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் டி.ராஜேந்தர். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 19 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையும் படியுங்களேன்- கோவை சரளாதான் நடிப்பு ராட்சசி.! ஆண்டவர் கொடுத்த அக்மார்க் சர்டிபிகேட்.!
அவருக்கு, வயிற்றில் சிறிய ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சை தர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும், அதனால் மருத்துவர்களின் அறிவுரையின் படி சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதாகவும் அவரின் மகன் சிம்பு அறிக்கை ஒன்றை வெளியீட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக இன்று இரவு அமெரிக்கா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் டி ராஜேந்தரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
இருவரும் சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு அதில் ” நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே” என்று பதிவிட்டுள்ளார். இந்த சந்திப்பின் போது டி ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…