சினிமா

கமல்ஹாசன் – மணிரத்னம் இணைந்த புது படம்! பணிகளை தொடங்கிய படக்குழு!

Published by
பால முருகன்

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய 224-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். தற்காலிகமாக இந்த திரைப்படத்திற்கு KH234  என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் –  மணிரத்னம்  கூட்டணி இந்த திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள காரணத்தால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றது போல படம் கண்டிப்பாக தரமாக இருக்கும். ஏனென்றால், இதற்கு முன்பு இவர்கள் இருவரும் நாயகன் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருந்தார்கள்.

கமல் சாரோட நட்பை நானே கெடுத்துட்டேன்! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் லிவிங்ஸ்டன்!

அந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்று இன்று வரை தமிழ் சினிமாவே பேசப்படும் படமாக இருக்கிறது. எனவே 36  ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் –  மணிரத்னம் இந்த படத்தின் மூலம் இணைகிறார்கள் என்றால் கண்டிப்பாக படத்தில் எதோ இருக்கிறது. இதை தான் கமல்ஹாசனும் நானும் அவரும் ஒரு படத்தில் இணைக்கிறோம் என்றால் அந்த படத்தில் எதோ பெரிதாக இருக்கிறது என்று அர்த்தம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படவிருக்கும் நிலையில், படத்தின் பூஜை மற்றும் படத்தின் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக வீடியோ ஒன்றை வெளியீட்டு படக்குழு அறிவித்துள்ளது. வீடியோவில் நாயகன் படத்தில் இடம்பெற்ற வசனம் வருகிறது அதன் பிறகு கமல்ஹாசன், மணிரத்னம் படத்தில் பணியாற்றுவார்கள் வருகிறார்கள் அத்துடன் வீடியோ முடிவடைகிறது.  மேலும், KH234 படத்தின் புது அப்டேட் வரும் நவம்பர் 7 கமலின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படும். படத்திற்கான மற்ற வேலைகள் மட்டும் இப்போது ஆரம்பம் ஆகும். கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில், அடுத்ததாக இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தில் நடித்து முடித்த பிறகு கமல்ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள KH234  படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…

20 seconds ago

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

9 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

11 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

12 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

12 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

13 hours ago