ஜாக்கிரதையா இருங்க – ரோபோ சங்கரிடம் தொலைப்பேசியில் நலம் விசாரித்த கமல்ஹாசன்!
விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரோபோ சங்கர். இதனை தொடர்ந்து, ரோபோ சங்கருக்கு சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. பின்னர், ரோபோ சங்கர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில், அவரது உடல் மெலிந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு, அவரது புகைப்படம் வெளியானது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் ரோபோ ஷங்கருக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பினர். அப்போது இது குறித்து ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா கூறுகையில், தனது கணவர் ஒரு படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். மேலும் சில மாதங்களுக்குப் பிறகு ரோபோ சங்கர் தான் மஞ்சள் காமாலை நோயினால் இப்படி ஆனதாக தெரிவித்தார்.
இந்நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், ரோபோ சங்கர் உடல்நிலை பற்றி தொலைபேசி மூலமாக விசாரித்தார். அப்போது, ரோபோவிடம் கமல் ஜாக்கிரதையா இருங்க, வேளைக்கு சரியாக சாப்பிடுங்க, மாத்திரை எடுத்துக்கோங்க என்று கூறினார்.
மேலும், ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, உறவினர் கார்த்திக் ஆகியோருடன் உரையாடினார். அப்போது, ரோபோ சங்கர் தன் மகளுக்கு இன்னும் ஆறு மாதத்தில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் திருமண தேதி குறித்து உங்களிடம் கேட்டு தான் முடிவெடுப்பேன் என்றும் ரோபோ சங்கர் கூறினார்.
#உலகநாயகன் #கமல்ஹாசன் , #ரோபோ_சங்கர் உடல்நிலை பற்றி தொலைபேசி மூலமாக விசாரித்தார், மற்றும் ரோபோ சங்கர் மனைவி பிரியங்கா, மகள் இந்திரஜா, உறவினர் கார்த்திக் ஆகியோர் @ikamalhaasan னிடம் பேசிய நெகிழ்ச்சியான தருணம்.#KamalHaasan #RoboShankar pic.twitter.com/2eoCZtV9or
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) July 15, 2023