குணா : காலங்கள் கடந்தும் பேசப்படும் படங்களில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா படமும் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியான சமயத்தில் கொண்டாடபடவில்லை என்றாலும் கூட இன்றய காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற வசனங்கள் மற்றும் குகை பாடல் ஆகியவையை வைத்து மலையாளத்தில் மஞ்சுமல் பாய்ஸ் என்கிற படமும் எடுக்கப்பட்டு அந்த படம் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே குணா குகை மற்றும் படத்தின் கடைசியில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடலை வைத்தது தான் என்று கூட கூறலாம்.
இப்படி காலங்கள் கடந்தும் பேசப்படும் படமாக இருக்கும் குணா படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் ஸ்வாதி சித்ரா இன்டர்நேஷனல் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஸ்வாதி சித்ரா இன்டர்நேஷனல் நிறுவனத்திடம் இருந்து படத்தின் ரீ -ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள பிரமிட் ஆடியோ குரூப் குணா படத்தினை டிஜிட்டல் வடிவத்தில் மெருகேற்றி ரீ-ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளார்களாம்.
அதன்படி, குணா படத்தினை வரும் ஜூன் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது. படம் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தினை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர். மேலும், இந்த குணா திரைப்படத்தில் ரேகா , ஜனகராஜ், அஜய் ரத்னம், எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஷரத் சக்சேனா, கிரிஷ் கர்னாட், பிரதீப் சக்தி, எஸ். வரலட்சுமி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…