அதிரடி உத்தரவு போட்ட கமல்ஹாசன்…கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள்.!
திரையரங்குகள் இக்கட்டான சூழ்நிலையில் சென்று கொண்டிருந்த சமயத்தில தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஐடியா ஒன்றை கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் கமல் ஹாசன் பன்முக திறமை கொண்டவர். அவர் இயக்கம் மட்டும் இல்லாமல், நடிப்பது வரை வெவ்வேறு விஷயங்களை செய்து அசத்தியுள்ளார். அவர் நடித்த ஒவ்வொரு படங்களிலும் ஒரு வித்தியாசம் இருக்கும். அந்த காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாமல் இருந்தாலும் கூட, சில விஷயங்களை நேர்த்தியாக செய்து முடித்திருப்பார்.
90 காலகட்டத்தில் நடிகர் கமல் தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து ஒரு கூட்டத்தை நடத்தியுள்ளார். அதாவது, அப்போது திரையரங்குகள் இக்கட்டான சூழ்நிலையில் சென்று கொண்டிருந்த சமயத்தில் செய்வதன்றி திணறிய நேரத்தில் கமல் ஹாசன் தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஐடியா ஒன்றை கூறியுள்ளார்.
இது குறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேசுகையில், தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து திரையரங்கீழ் உள்ள மோனோ ஸ்பீக்கர்களை புடுங்கி போட்டுட்டு, DTS-ஐ பொறுத்த சொல்லியுள்ளார். இனி அடுத்தகட்டமாக DTS தான் வர போகுது, அதனால முதலே நான் சொல்லிட்டேன் என்று கூறினாராம்.
இப்படி கூட்டத்தில் அவர் கூறியதும், கூட்டம் முடிந்த பின் சில உரிமையாளர்களை மட்டும் என்ன இவரு, இப்படி சொல்றாரு. எல்லா தியேட்டர் களும் கல்யாண மன்படமாக மாறிட்டு இருக்கு, ஏதவாது வருமானம் பார்க்க, ஐடியா சொல்வாரா பார்த்தால் செலவுக்கு ஐடியா சொல்றாரு சொன்னாங்க.
அதில், சில தெலுங்கு தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் அதனை ஒப்புக்கொண்டனர். அவர் சொன்னபடி, சில மாதங்களிலேயே கமல் சொன்னபடி, மாறியது. இனிமேல் தியேட்டர்களில் ஒளிபரப்புகையில் AC குறிப்பிடப்படும் இடங்களில் DTS குறிப்பிடப்பட்டது.
அதன்படி, ஆபாவாணனின் ‘கருப்பு ரோஜா’, கமல்ஹாசனின் ‘இந்தியன்’ மற்றும் பிரியதர்ஷனின் ‘சிறைச்சாலை’ DTS சரவுண்ட் சவுண்டுடன் வெளியாகின. மதுரையில் டிடிஎஸ் இல்லாத தியேட்டரை விட தேனியில் ‘இந்தியன்’ படத்தை டிடிஎஸ்ஸில் திரையிட்ட ஒரு தியேட்டர் வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.