மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன்.!
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இதில், சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமலஹாசன் கலந்து கொள்கிறார். இன்று மாலை நடைபெற இருக்கும் இசை வெளியீட்டு விழாவின் முன் ஏற்பாடுகளின் வீடியோவை பகிர்ந்து கொண்டு, கமலஹாசன் கலந்து கொள்வதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
The powerhouse of Indian Cinema, #Ulaganayagan @ikamalhaasan sir will be gracing the grand audio launch function of #MAAMANNAN as the chief guest today. #MAAMANNANLiveConcert, from 6PM onwards. @mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil… pic.twitter.com/JQ8RsNM4Q7
— Udhay (@Udhaystalin) June 1, 2023
இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். மேலும், படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.