கண்ணீரும் காயங்களும் உண்மை தான்! நடிகை கல்யாணி பிரியதர்ஷன் வேதனை!

Kalyani Priyadarshan

தமிழ் சினிமாவில் ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். தமிழில் ஹீரோ படத்தின் மூலம் தான் அறிமுகமானார். ஹீரோ படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்திருந்தார்.

இவருக்கு மாநாடு படம் தமிழில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. மாநாடு வெற்றியை தொடர்ந்து தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தற்போது ஜீனி, அதைப்போல மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் மலையாளத்தில் நடித்திருந்த ஆண்டனி படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இதுவரை இல்லாத அளவிற்கு பாக்ஸர் கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.  ஆண்டனி படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் ஏற்பட்ட வலிகள் குறித்து சற்று எமோஷனலாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” இந்த படத்திற்காக மக்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவுக்கு நான் நன்றி சொல்கிறேன்.

எனக்கு சூர்யாவுக்கு எந்த பிரச்சனையும் இல்லை! மனம் திறந்த இயக்குனர் அமீர்!

இந்த படத்தில் நடிப்பதற்காக நான் மூன்று வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் சுமார் நான்கு மணி நேரம் கிக் பாக்ஸிங் பயிற்சி  செய்து பழகினேன். இப்படி பாக்ஸர் ஆக நான் இந்த திரைப்படத்தில் நடித்து வந்த காரணத்தால் அதற்காக கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது. கடுமையாக பயிற்சியும் எடுத்தேன். அப்படி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்த போது தான் எனக்கு காயம் ஏற்பட்டது .

கை கால்கள் உணர்ச்சிகள் இல்லாதது போல இருந்தது. அந்த காயங்கள் எல்லாம் எனக்கு கண்ணீரை வரவழைத்தது. காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் எல்லாம் உண்மை தான். எப்படியோ ஒரு வழியாக இரண்டு நாட்களுக்கு பிறகு எனக்கு காயங்கள் எல்லாம் சரி ஆகிவிட்டது. காயம் ஏற்பட்ட காரணத்தால் என்னால் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியவில்லை” எனவும் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் கல்யாணி பிரியதர்ஷன் சீனி படத்தில் நடித்து வருவதை போல மைக்கில் பாத்திமா எனும் மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பும் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்