யானையிடம் நேருக்கு நேர் ஜிவி பிரகாஷ்….மிரட்டும் கள்வன் டிரைலர்.!

Kalvan Trailer: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘கள்வன்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
முன்னதாக, படத்தில் இடம்பெற்றுள்ள 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது டிரைலரும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ட்ரெய்லரை வைத்து பார்க்கும்பொழுது, குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையை, விரட்டுவதே படத்தின் கதை.
ஜிவியின் வழக்கமான படத்தை காட்டிலும், இந்த படம் சற்று வித்தியாசமான கதையம்சம் கொண்டுதால் படம் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவாளர் பிவி ஷங்கர் இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தையும் இயக்கி படத்தின் ஒளிப்பதிவையும் இயக்குனரே பார்த்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் படத்தின் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி ஜிவி பிரகாஷ் தான் இப்படத்திற்கு இசையமைக்க, பின்னணி இசையை ரேவா கையாண்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025