1000 கோடி வசூலை தாண்டிய கல்கி 2898 AD! ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

kalki 2898 ad

கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், துல்கர் சல்மான், மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கல்கி 2898 AD.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி , மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படம் மிகவும் நன்றாக இருந்த காரணத்தால் படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்து கடவுளான விஷ்ணுவின் நவீன அவதாரம், தீய சக்திகளிடமிருந்து உலகைப் பாதுகாக்க பூமியில் அவதரித்த கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 600 கோடி பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் 1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததது.

இன்னுமே படம் பல திரையரங்குகளில் ஓடி கொண்டும் இருக்கிறது. இந்நிலையில், படத்தை திரையரங்குகளுக்கு சென்று பார்க்க தவறியவர்கள் எப்போது ஓடிடி தளத்தில் வெளியாகும் என காத்திருந்தார்கள். இதனையடுத்து, அவர்களுக்காகவே படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி, கல்கி 2898 AD திரைப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . ஹிந்தியில் படம் பார்க்க விரும்புபவர்கள் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம். அதேபோல மற்ற மொழிகளில் படத்தை பார்க்கவேண்டும் என்றால் அமேசான் பிரேம் தளத்தில் பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested