நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் மாடல் அழகியான தாரிணி காலிங்கராயரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இவர்களுடைய நிச்சியதார்த்தம் கூட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நமபவர் 10-ஆம் தேதி இருவீட்டாரின் முன்னிலையில், நடைபெற்றது. இவர்களுடைய நிச்சியதார்ததிற்கு சில முக்கியமான பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.
விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் பற்றியும் தன்னுடைய காதல் கதை பற்றியும் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் தாரிணியை காதல் செய்வதற்கு முன்பு முரட்டு சிங்கிளாக இருந்தேன். எனக்கு நிச்சியதார்தம் ஆகும் நான் காதலிப்பேன் என்று சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை.
கோலாகலமாக நடந்து முடிந்த நிச்சியதார்த்தம்.! விரைவில் காதலியை கரம் பிடிக்கிறார் காளிதாஸ்.!
அந்த அளவுக்கு ஒரு முரட்டு சிங்கிளாகவே நான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். பிறகு என்னுடைய வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது தாரிணி தான். எனக்கு முதலில் இருந்தே தாரிணியை மிகவும் பிடிக்கும் எனக்கு எங்கள் இருவருக்குள் நல்ல ஒரு புரிதல் இருந்த காரணத்தால் எங்கள் இருவருக்கு இடையே காதல் நன்றாக செட் ஆகிவிட்டது.
முதலில் என்னுடைய காதலை எப்படி வீட்டில் சொல்லலாம் என தயங்கி கொண்டு இருந்தேன். பிறகு ஒரு முறை என்னுடைய காரின் ப்ளூடூத் வழியாக பேசி கொண்டிருந்தேன். அதனை என்னுடைய சகோதிரி பார்த்துவிட்டு வீட்டில் போய் சொல்லிட்டாங்க. பிறகு நானே எப்படியாவது வீட்டில் சொல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
என்னுடைய தங்கை செய்த வேலையாள் வீட்டிற்கு என்னுடைய காதல் தெரிந்துவிட்டது. தெரிந்தவுடன் கோபம் எல்லாம் படவில்லை ரொம்ப சாதாரணமாக தான் இருந்தார்கள். என்னுடைய அப்பா காதலுக்கு சம்மதம் தெரிவித்தும் விட்டார். எல்லாம் நல்ல படியாக நடந்து வருகிறது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் நன்றி. ஒரு காலத்தில் முரட்டு சிங்கிளாக இருந்த நான் அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள போகிறேன்” எனவும் காளிதாஸ் வெட்கத்துடன் கூறியுள்ளார்.
டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…