நடிகர் தனுஷின் 50-வது திரைப்படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது. இந்த படத்தில் தனுஷுடன் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்தினை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷ்ன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SK23 படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ ! பிரபலங்கள் வாங்கிய சம்பளம்!
இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட காளிதாஸ் ஜெயராம் ராயன் படத்தை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” தனுஷ் சார் ரசிகர்கள் ‘தரமண சம்பவம் காத்திருக்கிறது’ . அந்த அளவிற்கு ராயன் திரைப்படம் சூப்பராக தயாராகி வருகிறது. கண்டிப்பாக சொல்கிறேன் படம் வேற லெவலில் இருக்கும்.
இது எனக்கு ஒரு கனவு. ஏனென்றால், கமல் சாரை எப்படி பார்த்தேனோ அப்படித்தான் தனுஷ் சாரையும் பார்க்கிறேன் அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த திரைப்பட இயக்குனரும் கூட அவரது இயக்கத்தில் அவருடன் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். விரைவில் படத்தின் அப்டேட்கள் வெளியாகும் கொண்டாடுங்கள்” எனவும் காளிதாஸ் ஜெயராம் தெரிவித்துள்ளார். ராயன் படத்தை பற்றி இவர் பேசி இருப்பது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…