கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த கோதண்டராமன் காலமானார்

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். மறைந்த நடிகர் கோதண்டராமன்  கலகலப்பு திரைப்படம் மட்டுமின்றி விஜய்யுடன் பகவதி, திருப்பதி, அஜித்துடன் கிரீடம், வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் என பெரிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இருப்பினும் இவருடைய பெயரை வெளிக்காட்டுவதற்கு முக்கியமான காரணமாக அமைந்த திரைப்படம் என்றால் கலகலப்பு திரைப்படம் தான். அந்த அளவுக்கு இந்த திரைப்படம் நடிகர் கோதண்டராமனுக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.  படங்களில் நடித்தது மட்டுமின்றி, 25 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

இந்நிலையில், இப்படி ஒருவர் இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய இறுதிச்சடங்கு இன்று மாலை சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்