நடிகர் விஜயகாந்த் பல ஹிட் படங்களில் நடித்து ஹிட் கொடுத்தது ஒரு புறம் இருந்தாலும் மற்றோரு பக்கம் அவர் செய்த உதவிகள் மற்றும் அவர் செய்த நல்ல விஷயங்களே அவரை மக்களுக்கு பிடிக்க உதவியாக அமைந்தது என்றே சொல்லலாம். சாப்பாடு மற்றும் பிரபலங்களை பிரச்னையில் இருந்து விஜயகாந்த் காப்பாற்றியது அனைவர்க்கும் தெரிந்த ஒன்று தான்.
ஆனால், அதனையும் தாண்டி தயாரிப்பாளர்களின் கஷடத்தை உணர்ந்து விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் படங்களில் நடித்து இருக்கிறாராம். அந்த வகையில், விஜயகாந்த் இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் நடித்த ‘கூலிக்காரன்’ படத்தில் நடிக்க சம்பளமே வாங்கவில்லையாம். இந்த தகவலை அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ” விஜயகாந்த் என்றுமே தயாரிப்பாளர்கள் சம்பளம் தரவில்லை என்று சொல்லவே சொல்லாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு சம்பளமே கொடுக்கவில்லை என்றாலும் கூட அதனை பற்றி பெரிதாக யோசிக்கவே மாட்டார். நான் விஜயகாந்தை வைத்து கூலிக்காரன் படத்தை தயாரித்து இருந்தேன்.
பெரிய பிரச்சனையில் இருந்து பிரபல நடிகரை காப்பாற்றிய விஜயகாந்த்!
இந்த திரைப்படத்தினை அவரை வைத்து தயாரிக்கும்போது சம்பளத்தை எடுத்துக்கொண்டு கொடுக்க சென்றேன். வேண்டாம் எனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டார். அப்போது நாங்கள் இருந்த சூழ்நிலை மிகவும் கடினமாக இருந்தது அதனால் அப்போது சம்பளம் வாங்கினோம் இப்போது கொஞ்சம் நன்றாக இருக்கிறோம்.
இப்போது உங்களிடம் நன்றாக பழகி இருக்கிறோம். எனவே, இந்த நேரம் உங்களிடம் ஏன் பணம் வாங்கவேண்டும்? என்ற எண்ணம் எனக்குள் தோணுகிறது. இதனால் எனக்கு பணம் வேண்டாம் நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் ” என விஜயகாந்த் கூறியதாக தாணு கூறியுள்ளார். மேலும், கடந்த 1987-ஆம் ஆண்டு வெளியான இந்த கூலிக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.
இப்படி இவ்வளவு பெரிய ஹிட் படத்தில் நடிக்க விஜயகாந்த் சம்பளமே வாங்காமல் நடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பல நல்ல விஷயங்களை செய்துள்ள விஜயகாந்த் தற்போது பழைய நிலைமையில் இல்லாமல் உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமிபதி வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…