புயல் எதிரொலி: ‘கலைஞர்100’ விழா ஒத்திவைப்பு…புதிய தேதி வெளியீடு.!

Kalaingar100 -Tamilcinema

சென்னை, சேப்பாக்கத்தில் மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் பிரமாண்டமாக நடந்துகிறாரகள். அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல் என தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவை கலந்து கொள்ளவதாக கூறப்படுகிறது.

அதன்படி,  இந்த விழாவானது டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. இந்த விழா தற்பொழுது, மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் திரைத்ததுறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து ‘கலைஞர் 100’ என்ற மாபெரும் கலைஞர் நூற்றாண்டு விழா வருகிற (24.12.2023) அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவித்து இருந்தோம்.

விழாவிற்கு வருகை தரும் அஜித்? சென்னை வந்தது ஏன்? திரைத்துறை சங்கங்களின் நகர்வு…

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மக்கள் சிரமங்களுக்கு ஆளாகி உள்ளார்கள். மேலும், முதல்வர் அரசு நிர்வாகமும் மக்களுக்கான நிவாரண பணிகளில் முழுமூச்சாக ஈடுபட்டுள்ளார்கள். இதனை கருத்தில் கொண்டு (24.12.2023) அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழா (06.01.2024) சனிக்கிழமை அன்று மாலை நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்