கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு! விஜய், அஜித்?

Kalaignar100 - kamal - rajini

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.

அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்த விழாவில் கலந்துகொள்ள திரையுலகிம் சார்பில், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அழைத்துள்ளனர்.

அதேபோல், நாசர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் மற்றும் நடிகர் சங்கத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் சேர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசன் இல்லத்திற்கு  சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த நிகழ்விற்கு ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொள்ளவதாக உறுதி அளித்த நிலையில், இந்த நிகழ்வு குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் அடுத்த மாதம் இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் எனக் கூறப்படும் நிலையில், இந்த விழா தொடர்பான தேதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் இருந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிலம்பரசன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என்றும் தமிழை தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளை சேர்ந்த முக்கிய நடிகர்கள் பங்கேற்பார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதீப்பை எதுக்கு வெளிய அனுப்புனீங்கனு கேள்வி கமலுக்கு வரப்போகுது! எச்சரித்த பிரபல இயக்குனர்!

இதற்கிடையில், உச்ச நட்சத்திரங்களான நடிகர் விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக என்று தெரிவில்லை. ஏனென்றால், இது தொடர்பாக அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்ட்டது போல், விஜய்-அஜித் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே அவர்களை அழைத்தாலும் கலந்து கொள்வார்களா என்று கேள்வி எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்