தொடங்கியது ‘கலைஞர் நூற்றாண்டு விழா’…வருகை தரும் பிரபலங்கள்.!

Kalaignar100

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில், மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக தொடங்கியது. சுமார், 20,000 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் மாலை 4 மணி அளவில் தொடங்கிய இந்த நூற்றாண்டு விழாவில் எண்ணற்ற நட்சத்திரங்கள் பங்கேற்று வருகிறார்கள். குறிப்பாக, இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

சுமார் 6 மணிநேரம் இவ்விழவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதில் சிம்பு, விஷால், விக்ரம் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என தெரிகிறது. இதனிடையே விழாவுக்கு பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

திரைத்துறை கொண்டாடும் ‘கலைஞர் நூற்றாண்டு விழா’ ட்ரெய்லர் வெளியீடு!

மேலும் இந்த விழாவில், மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு மௌன அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தமிழ் திரையுலகை தாண்டி இந்தி திரையுகில் இருந்து அமிதாப் பச்சன், மலையாள திரையுலகில் இருந்து மோகன் லால், மம்முட்டி ஆகியோருக்கும் கன்னட பட உலகிலிருந்து சிவராஜ் குமார், தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவி உள்ளிட்டோர் வருகை தரவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்