நாளை கலைஞர் நூற்றாண்டு விழா: பங்கேற்கும் தென்னிந்திய பிரபலங்கள்.!

Kalaignar 100

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

இப்போது, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த விழாவானது கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி நடைபெறவிருந்த இருந்தது. ஆனால், அப்போது மிக்ஜாம் புயல், வெள்ள நிவாரணப் பணிகள் காரணமாக, (24.12.2023) அன்று நடைபெறவிருந்த கலைஞர் நூற்றாண்டு விழாவானது நாளை (06.01.2024) மாலை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்சில் நடைபெறுகிறது.

முன்னதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விழாக்குழு சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஜய் அஜித்தை அழைத்துள்ளளோம்…யாரையும் வற்புறுத்தவில்லை – தயாரிப்பாளர் சங்கம்.!

அதன்படி, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் தவிர, அஜித்குமார் மற்றும் தளபதி விஜய் போன்ற நட்சத்திரங்களுக்கும் அழைப்பு வடிக்கப்பட்டுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர்களும் கலைஞர் 100ல் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய திரையுலகமே பங்கேற்கும் ‘கலைஞர் 100’ விழா….அதிர போகும் சென்னை!

சொல்ல போனால் நாளை நெடைபெறும் இந்த நிகழ்வில் தென்னிந்திய பிரபலங்கள் பங்கேற்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. அதன்படி, இந்தி திரையுகில் இருந்து அமிதாப் பச்சன், மலையாள திரையுலகில் இருந்து மோகன் லால், மம்முட்டி ஆகியோருக்கும் கன்னட பட உலகிலிருந்து சிவராஜ் குமார், தெலுங்கு திரையுலகிலிருந்து சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 24 சங்கங்கள் சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது பலரது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார், ஆறுமணி நேரம் நடைபெற இருக்கும் இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்