இந்திய திரையுலகமே பங்கேற்கும் ‘கலைஞர் 100’ விழா….அதிர போகும் சென்னை!

Indian cinema -Kalaignar 100

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள ‘கலைஞர் 100’ விழாவுக்கு இந்திய முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் முழுவதும் திமுகவினர் மற்றும் தமிழக அரசு கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நடத்தப்பட உள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி தனது எழுத்து மற்றும் வசனங்களால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்தவர். இந்நிலையில், அவரை சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்ட விழாவுக்கு நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட 24 சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

இந்த விழாவானது சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், டிசம்பர் 24ம் தேதி இவ்விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க ஏற்கனவே ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமிதாப் பச்சன், மோகன் லால், சிவராஜ் குமார், சிரஞ்சீவி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா: ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு! விஜய், அஜித்?

முன்னதாக, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்.ராமசாமி, செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் விழாக்குழு சார்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை நேரில் சென்று சந்தித்து அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரமாண்டமாக நடைபெறும் ‘கலைஞர் 100’ விழா! வருகை தருவாரா அஜித்குமார்?

பல ஆண்டுகளுக்குப் பிறகு 24 சங்கங்கள் சார்பில் இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுவது பலரது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த விழாவுக்கு நடிகர் விஜய் மற்றும் அஜித் வருவார்களா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்