அடடே…புதிய தொழில் தொடங்கிய நம்ம காஜல் அகர்வால்…குவியும் வாழ்த்துக்கள்.!!

kajalagarwal

பிரபல நடிகையான காஜல் அகர்வால் தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கான அறிமுக நிகழ்ச்சியும் அண்மையில் நடைபெற்றது. அதன்படி, நடிகை காஜல் அகர்வால் ‘காஜல் பை காஜல்’ (Kajal by Kajal ) என்ற அழகு சாதனப் பொருட்களின் விற்பனையைத் தொடங்கியுள்ளார்.

Actress Kajal Aggarwal
Actress Kajal Aggarwal [Image source : twitter/ @HackerCine]

இந்த  கடை திறப்பு விழாவிற்கு காஜல் அகர்வால் தனது கணவர் கௌதம் கிச்சாலுவை சிறப்பு விருந்தினராக அழைத்தார்.காஜலின் புதிய தொழில் திறப்பு விழாவிற்கு வந்த கெளதம் கிச்சாலு கடையை திறந்து வைத்தார். அதன் பிறகு தன் அன்பு மனைவிக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து நெகிழ வைத்தார்.

இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், புதியதாக காஜல் அகர்வால் தொழில் தொடங்கியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

kajalkitchulu
kajalkitchulu [Image source : twitter/ @RMediaOff]

மேலும், நடிகை காஜல் அகர்வால் கடந்த 2020 இல் கௌதம் கிச்சாலு என்ற தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்தது. அந்த குழந்தைக்கு ” நீல் கிச்சலு” என்று பெயரிட்டு சமீபத்தில் தனது மகனின் முதல் பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்