பொங்கல் தினத்தை முன்னிட்டு கைதி 2 படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. விக்ரம் பட ஷூட்டிங் முடிந்து கைதி 2 பட ஷூட்டிங் ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே முக்கிய இயக்குனராக மாறி நிற்கிறார். கார்த்தி, விஜய், கமல் மீண்டும் உலகநாயகனா அல்லது தளபதியா அல்லது தெலுங்கு நடிகரா, பாலிவுட்டா என எந்த படத்தை இயக்குவார் என சினிமா ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அதற்கு முதற்காரணம் இவரது 2வது இயக்கமாக வெளியான கைதி. 2வது படத்தில் ஒரு ஆயுள் தண்டனை கைதி, ஒரு இரவில் நடக்கும் கதை, ஹீரோயின், பாட்டு எதுவும் இல்லை. ஆனால் படம் ஆரம்பம் முதல் சுவாரஸ்யமாக நகர்ந்திருக்கும்.
இந்த திரைப்படம் முடியும் போதே இதன் இரண்டாவது பாகத்தில் தான் முழு கதையும் தெரியும் வண்ணம் முடித்திருப்பார் இயக்குனர் லோகேஷ். அதனால் கைதி 2 எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஆனால், உலகநாயகனின் விக்ரமை முடிந்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜயை வைத்து இயக்குவதாக இருந்தது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, விஜய் அடுத்து வம்சி இயக்கும் படத்தை முடித்து தான் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.
விக்ரம் ஷூட்டிங் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. அதனால், அடுத்து வரும் பொங்கலுக்கு கைதி-2 பட அறிவிப்பை அறிவித்துவிட்டு, விக்ரம் பட வேலைகள் முடிந்த பிறகு கைதி 2 ஷூட்டிங்கை ஆரம்பிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது அநேகமாக ககைதி 2 திரைப்பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…