மீண்டும் காஞ்சனாவை கையிலெடுத்த ராகவா லாரன்ஸ்! இதில் அவர் ஹீரோ இல்லை!
பேய் படங்களை திகிலோடு காமெடி கலந்து எடுத்து ஹிட்டாக்குவதில் கைதேர்ந்தவர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ். இன்னும் சொல்லப்போனால் இதில் பெரிய கதைமாற்றம் கூட செய்யாமல் திரைக்கதையில் மாற்றம் செய்து அத்தனையும் ஹிட்டாகிவிடுகிறார்.
அண்மையில் இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது. தற்போது இதே வேகத்தோடு பாலிவுட்டில் தடம் பதிக்க ரெடியாகிவிட்டார். இம்முறை இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. பாலிவுட் முன்னணி ஹீரோ அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். கீரா அட்வானி ஹீரோயினாக நடிக்க உள்ளார். இதற்கான வேலைகளை தற்போது லாரன்ஸ் ஆரம்பித்துள்ளார் என திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
DINASUVADU