இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கு.! சொன்னபடி டிசம்பரில் ரிலீஸ் ஆகுமா காத்துவாக்குல ரெண்டு காதல்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டிசம்பரில் ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட காதுவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்திற்கு இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் பெண்டிங் இருக்கிறதாம்.
விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவக்குல ரெண்டு காதல். இந்த படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ஏற்கனவே விக்னேஷ் சிவன் – நயன்தாரா – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான நானும் ரௌடிதான் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது அதனால், இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாவே உள்ளது.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ பட நிறுவனமும், விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் ரௌடி பிச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் போஸ்டர்கள் நேற்று வெளியாகின. அதில் விஜய் சேதுபதி ராம்போ எனும் கதாபாத்திரத்திலும், சமந்தா கஜிதா எனும் கதாபாத்திரத்திலும், நயன்தாரா கண்மணி எனும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அந்த போஸ்டர்களிலேயே டிசம்பரில் தியேட்டரில் படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது வெளியான தகவலின் படி, இன்னும் ஒரு வாரம் ஷூட்டிங் மீதம் இருக்கிறதாம். அது முடிந்த பிறகுதான் பட ரிலீஸ் வேலைகள் ஆரம்பிக்குமாம். ஆதலால், குறித்த மாதத்திற்குள் படம் ரிலீஸ் ஆகுமா என ரசிகர்கள் இந்த ரெண்டு காதலை காதுவாக்குல எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“மிரட்டலுக்கு பயப்படவே மாட்டோம்”..பதிலடி கொடுத்த ஹமாஸ்! மீண்டும் எச்சரித்த இஸ்ரேல் !
February 12, 2025![israel](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/israel.webp)
LIVE : தமிழக அரசியல் நிகழ்வுகள் முதல்…சாம்பியன்ஸ் ட்ராஃபி அப்டேட் வரை!
February 12, 2025![live today news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/live-today-news.webp)