ஸ்டைலான ராம்போவாக மாறிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.! KVRK ஃபர்ஸ்ட் லுக் இதோ.!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்து வரும் காதுவாக்குல ரெண்டு காதல் படத்தின் போஸ்டர்கள் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி – நயன்தாரா – இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் நானும் ரௌடிதான். இந்த திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இதே கூட்டணி இன்னோர் படத்திற்கு இணைந்துள்ளது. இந்த கூட்டணியில் சமந்தாவும் புதிய இணைப்பாக இணைந்துள்ளார்.
அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதில் ஏற்கனவே ரெண்டு காதல் எனும் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை அடுத்து, தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
அதில், முதலில் விஜய் சேதுபதியின் லுக் மற்றும் கதாபாத்திரம் அடங்கிய போஸ்டர் வெளியாகியுள்ளது. ராஜன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊஹாந்திரம் (R’anjankudi A’nbarasu M’urugesa B’oopathy O’hoondhiran) அதனை சுருக்கி ராம்போ என பெயர் வைத்துள்ளனர். படம் ஸ்டைலான நகரத்து பின்னணியில் ஆன காதல் கதை என போஸ்டரில் தெரிகிறது.