சூர்யாவின் காப்பான் எப்போது ரிலீஸ் ஆகும்?! குழப்பத்தில் ரசிகர்கள்!

சூர்யா நடிப்பில் தற்போது ரிலீசிற்கு தயாராகி உள்ள திரைப்படம் காப்பான். இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மோகன்லால், ஆர்யா, சயீஷா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் முழுவதும் ரெடியாகி ரிலீசிற்கு தயாராகியுள்ளது.
இப்படம் முதலில் ஆகஸ்ட் 15இல் வெளியாகும் என கூறப்பட்டது. பின்னர் பிரபாஸின் சாஹோ திரைப்படம் ஆகஸ்ட் 15இல் வெளியாவதாக இருந்ததால் படத்தினை ஆகஸ்ட் 30க்கு தள்ளி வைத்தனர். தற்போது ஆகஸ்ட் 30 இல் சாஹோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டு விட்டது.
இதனால் படத்தை அதே தேதியில் வெளியிட்டால் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக திரையரங்குகள் கிடைக்காதே என படக்குழு யோசித்து வருகிறதாம். அதனால் இன்னும் பட ரிலீஸை காப்பான் படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிடாமல் இருக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025