21ஆம் நூற்றாண்டின் சிறந்த படைப்பாக ‘காலா’ திரைப்படம் தேர்வு!
காலா : பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டின் மாத இதழான ‘Sight and Sound’ வெளியிட்டுள்ள 21ம் நூற்றாண்டின் சிறந்த 25 திரைப்படங்களின் பட்டியலில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ இடம்பிடித்துள்ளது.
கடந்த 2018-ல் வெளியான காலா திரைப்படம் சமூக நீதி, அதிகாரம் மற்றும் நகர்ப்புற அரசியலை பற்றிய கதையாகும். மும்பையின் தாராவியின் சேரிகளில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவனாக, கரிகாலன் என்கிற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
பிரிட்டிஷ் ஃபிலிம் இன்ஸ்டிட்யூட் வெளியிடும் சைட் அண்ட் சவுண்ட் என்ற மாதத் திரைப்பட இதழ், இந்த நூற்றாண்டின் சிறந்த 25 திரைப்படங்களை பட்டியலில் தமிழ் சினிமாவிலிருந்து காலா திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சொல்லப்போனால், இந்திய சினிமாவிலேயே ‘காலா’ மட்டுமே இந்த மதிப்பிற்குரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி, மணிகண்டன், பங்கஜ் திரிபாதி, அஞ்சலி பாட்டீல், திலீபன், சம்பத் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் ரஜினிகாந்த் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.