2.0 படத்தை பின்னுக்குத்தள்ளிய “காலா “!காலா வெளியீட்டு தேதி இதோ …
தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படம் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியிடப்படுவதாக, தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 திரைப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால், வெளியீட்டு தேதி தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இதனால், நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்க, பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தை 2 பாய்ண்ட் ஓ படத்துக்கு முன்னதாக வெளியிட திட்டமிடப்பட்டது.
அதன்படி, வரும் ஏப்ரல் 27ஆம் தேதி காலா திரைப்படம் வெளியாவதாக, அந்த படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் கூறியுள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நடிகர் தனுஷ், டான்களின் டான் மீண்டும் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.