கைதி 2 அப்புறம் பாத்துக்கோங்க முதலில் நம்ம படம் தான்! லோகேஷிற்கு ரஜினி போட்ட கண்டிஷன்!
லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருந்தார். விக்ரம் எனும் ஹிட் படத்தை இயக்கிய பிறகு அவர் முழுக்க முழுக்க லியோ படத்தில் இறங்கி வேலை செய்துவிட்டு அந்த படத்தை இயக்கியும் முடிவித்துவிட்டார். இவர் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து அவருடைய 171-வது திரைப்படத்தை இயக்கும் வேலைகளில் ஈடுபட தொடங்கவுள்ளார்.
இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 171 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். லியோ படம் வெளியாகும் முன்னதாகவே இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது. ஆனால், லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை முடித்த பிறகு கைதி 2 படத்தை தான் எடுக்க திட்டமிட்டு இருந்தாராம்.
அதற்கான கதையை மேம்படுத்தி அடுத்த ஆண்டு கைதி படத்தை தொடங்கலாம் எனவும் திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், ரஜினிகாந்த் தன்னுடைய படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு செல்லுங்கள் என கண்டிஷன் போட்டாராம். அதன் காரணமாக தான் லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை வைத்துவிட்டு தலைவர் 171 படத்திற்கான வேலையை தொடங்கி இருக்கிறாராம்.
அதே சமயம், ரஜினிகாந்த் தற்போது டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் தன்னுடைய 170-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இந்த மாதம் தான் தொடங்கியுள்ளது. எப்படியும் படத்தை முடிக்க பல மாதங்கள் ஆகும் எனவே, அதுவரை லோகேஷ் கனகராஜ் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.