Jyothika : விஜய் மீது அப்படி என்ன கோபம்? மீண்டும் நடிக்க மறுத்த நடிகை ஜோதிகா!
![vijay and jyothika](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/09/vijay-and-jyothika-jpg.webp)
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68-வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். தற்காலிகமாக தளபதி 68 எனும் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது.
தளபதி 68 ஹீரோயின்
தளபதி 68 திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பரவ தொடங்கிவிட்டது. குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க நடிகை ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதனையடுத்து, தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிக்க ஜோதிகா மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.
அதனை தொடர்ந்து நடிகை சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இருந்தும் விஜய் ஜோதிகா இதற்கு முன்பு நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் எனவே நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருந்த தகவலை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். அவர்களுக்கு இந்த தகவல் சோகத்தை கொடுத்துள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் யார் நடிக்கப்போகிறார்கள் என்பது தெரிய வரும்.
ஏற்கனவே நடிக்க மறுத்த ஜோதிகா
விஜய்யுடன் ஜோதிகா நடிக்க மறுத்தது இது முதல் முறை இல்லை இதற்கு முன்பு இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்திலும் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்கவிருந்தார். சில காரணங்களால் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டார். அதைப்போல இப்போதும் தளபதி 68 படத்திலும் ஜோதிகா நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதால் நெட்டிசன்கள் விஜய் மீது அப்படி என்ன கோபம்? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அதிநவீன முறையில் தளபதி 68
தளபதி 68 படத்தில் அதிக VFX காட்சிகள் இடம்பெறும் என தகவல்கள் வெளியான நிலையில், அமெரிக்காவில் அதிநவீன முறையில் அவரது முகம் 3D ஸ்கேன் செய்யப்படும் புகைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதன் மூலம் படத்தில் நிறைய VFX காட்சிகள் இடம்பெறும் என உறுதியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
February 8, 2025![TNPSC MainExam](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/TNPSC-MainExam.webp)
வெல்லப் போவது யார்? சற்று நேரத்தில் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.!
February 8, 2025![ByeElection](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ByeElection.webp)
INDvENG: களமிறங்கும் ‘கிங்’ விராட் கோலி! தொடரை கைப்பற்றுமா இந்தியா?
February 7, 2025![ind vs eng 2 odi](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-2-odi-.webp)