இரண்டாவது இன்னிங்ஸில் கிராமத்து கதாபாத்திரத்தில் களமிறங்கும் ஜோதிகா!
தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கி பயணித்து வருகிறார் நடிகை ஜோதிகா. இவர் நடிப்பில் கடைசியாக ஜேக்பாட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது.
இந்த படத்தை அடுத்து, மீண்டும் சூர்யாவின் 2டி பட நிறுவனம் தயாரிப்பில் அடுத்தடுத்து 2 படங்கள் கமிட்டாகி உள்ளார். அதில் ஒன்று, பொன்மகள் வந்தாள் திரைப்படம் இதில் பாரதிராஜா, பாண்டியராஜன், பார்த்திபன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தை அடுத்து, கிராமத்து கதைக்களத்தில் கிராமத்து பெண்ணாக ஜோதிகா நடிக்க உள்ளார். இப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர். சரவணன் என்பவர் இயக்க உள்ளார்.