சில தினங்களுக்கு முன்பு இலங்கையில் தானே இருந்தேன் என்ன நடந்தது சோகத்தில் நடிகை காஜல்
நடிகை காஜல் அகர்வால் கோலிவுட் சினிமாவின் முன்னணியில் இருக்கும் நடிகை.மேலும் இவர் மற்ற மொழி திரை படங்களிலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகையும் கூட.
இந்நிலையில் இவர் தற்போது இலங்கையில் நேற்று தீவிரவாதிகளால் 8 இடத்தில் வெடி குண்டு தாக்குதல் நடத்த பட்டது. அதில் 200 மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள்.
இதையடுத்து தற்போது நடிகை காஜல் அகர்வால், அவரது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதாவது கடந்த சில தினங்களுக்கு முன்பு நான் இலங்கையில் தான் இருந்தேன். ஏன் இப்படியெல்லாம் அங்கு நடக்கிறது. இறந்தவர்களை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.