ஆட்டை வெட்டி பேனரை கொளுத்திய ரசிகர்கள்.. சர்ச்சையில் சிக்கிய ஜூனியர் NTR.!
ஆட்டைப் வெட்டியது மட்டும்மல்லாமல், அதன் ரத்தத்தை தேவாரா பட போஸ்டரில் தெறிக்க செய்த பரபரப்பான சம்பவம் சர்ச்சை கிளப்பியுள்ளது.
ஹைதராபாத் : தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவான “தேவரா” படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முதல் காட்சியை ஹைதராபாத்தில் பார்க்க வந்த ரசிகர்கள் ஆர்வமிகுதியில் கட்அவுட்டுக்கு ஆரத்தி காட்டியதில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, தேவரா FDFS கொண்டாட்டத்தின் போது, ரசிகர்கள் பட்டாசு வெடித்ததில் NTR-ன் 60 அடி கட் அவுட் பற்றி எரிந்தது என்றும், ஹைதராபாத் சுதர்சன் திரையரங்கில், தீ விபத்து சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
#DevaraDay #DevaraCelebrations #DevaraCelebration #Devara ????????????????????pic.twitter.com/4WV7mOExUN
— #என்றும்_அஜித்குமார் (@ThalaPrabu0708) September 27, 2024
மறுபக்கம், தேவரா முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்திற்காக மிருகத்தை பலி கொடுத்து, பதைபதைக்க வைக்கும் செயலை செய்திருக்கிறார்கள் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள். ஆட்டைப் வெட்டியது மட்டும்மல்லாமல், அதன் ரத்தத்தை தேவாரா பட போஸ்டரில் தெறிக்க செய்த பரபரப்பான சம்பவம் சர்ச்சை கிளப்பியுள்ளது.
#WATCH | முட்டாள்தனத்தின் உச்சகட்டம்:
தேவரா முதல் நாள் முதல் காட்சி கொண்டாட்டத்திற்காக மிருக பலி. பதைபதைக்க வைக்கும் செயலை செய்திருக்கிறார்கள் ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள். #Devara | #JrNTR | #SSRajamouli | #TNStreamline pic.twitter.com/hgzKUJnmaz
— TN Streamline (@TNStreamline) September 27, 2024
இவ்வாறு, என்டிஆரின் ரசிகரின் செயலை பார்த்த நெட்டிசன்கள், முட்டால் தனமான செயல் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக, தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி படத்தின் FDFS-க்கும் ரசிகர்கள் ஆடு வெட்டியதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.