பிக் பாஸ் வீட்டை விட்டு வந்ததும் ஜோவிகாவுக்கு அடித்த ஜாக்பாட்?

jovika vijaykumar bigg boss

வனிதாவின் மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் 2 வாரங்கள் அவருடைய பேச்சு மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். ஆனால், அதன்பிறகு எப்போதும் தூங்கிக்கொண்டு சோர்வாக இருந்த காரணத்தால் கடந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்து மக்களுக்கு இடையே குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

வழக்கமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலங்கள் வெளி வந்த பிறகு அவர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும். அந்த படங்களில் அவர்களும் நடித்து முன்னணி பிரபலன்களாக வளர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், கவின், ஹரிஷ் கல்யாண் போன்ற பிரபலங்கள் எல்லாம் தங்களுடைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு பெரிய பிரபலன்களாக வளர்ந்து விட்டார்கள்.

அவர்களை போலவே, பிக் பாஸ் சீசன் 7நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்துள்ள ஜோவிகாவுக்கும் பெரிய வாய்ப்பு ஒன்று சினிமாவில் கிடைத்திருக்கிறது. அது என்னவென்றால், நடிகரும், இயக்குனருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பு தான்.

ஜப்பான் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா? ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பார்த்திபன் தொடர்ச்சியாக படங்களை இயக்கி நடித்துக்கொண்டு இருக்கும் நிலையில், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகாவின் நடவடிக்கை மற்றும் அவருடைய இயக்கம் ஆர்வம் திறனை கருத்தில் கொண்டு பார்த்திபன் தன்னுடைய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு ஜோதிகா வெளியேறிய பிறகு கமல்ஹாசன் இத்தனை நாள் நீங்கள் இந்த வீட்டிற்குள் இருந்ததே பெரிய சாதனை தான். என்று அவருக்கு உத்வேகத்தை கொடுப்பது போல பேசினார். பிறகு பேசிய ஜோவிகா ” எனக்கு இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நல்ல பாடத்தை கற்றுக்கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு வாய்ப்பு கொடுத்தற்கு விஜய் தொலைக்காட்சிக்கு நன்றி” எனவும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

PM Narendra Modi’s stern warning
Chhattisgarh Naxal Encounter
Pahalgam terror attack video
Pahalgam Attack news
Kashmir Attack
america terrorist attack in kashmir