தவறாக நடக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள்..!லிஸ்ட் நான் சொல்லவா …!கஸ்தூரி சவால்
என்னிடம் தவறாக நடக்க முயன்ற பத்திரிக்கையாளர்கள் குறித்து கூறவா என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் சமூக ஊடகங் களில், பல்வேறு தருணங்களில் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட இளம் பெண்கள், ‘நானும்தான்’ (மீ டூ) என்ற முழக்கத்தைப் பயன்படுத்தி உண்மை களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் பதிவிட்ட பதிவில், கடந்த சில நாட்களாக, ஒவ்வொரு ஊடகத்திலும் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது.காரணம் என்னவென்றால் METOO விவகாரம் தொடர்பான நேர்காணலுக்கு நேரம் கேட்டு.ஆனால் நான் அவர்களிடம் பத்திரிகையாளர்களின் முறைகேடுகள் குறித்து பேசுவதற்கு நான் காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும், ஊடகப் புள்ளிகள் எவரெல்லாம் என்னிடம் தவறாக நடந்தனர் என்பது குறித்தும் பேசலாம் என்று இருக்கிறேன் என்று கூறினேன்.ஆனால் ஒருவர் கூட என்னிடம் பேசவில்லை. ஏன் என்று ஆச்சரியப்பட்டேன்! என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
In the last few days, I've been beseiged by requests from practically every media for interviews on "metoo".
I told them I am eager to talk about the journalists in the scandal. Also about the media persons who have misbehaved with me.
No one called me back. I wonder why?— Kasturi (@KasthuriShankar) October 13, 2018