Joker 2: ஜோக்கர் திரைப்பட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த ‘ஜோக்கர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் இயக்குனர் டோட் பிலிப்ஸின் வரவிருக்கும் மியூசிக்கல் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படமான ‘ஜோக்கர் 2’ அல்லது ‘ஜோக்கர்: ஃபோலி ஏ டியூக்ஸ்’ என்றழைக்கப்படும் இப்படத்தின் புதிய போஸ்டரை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டுள்ளது.
இதன் முதல் பாகம், ஜோக்க அக்டோபர் 2, 2019 அன்று ரிலீஸ் செய்யப்பட்டது. முதல் பாகம் மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இதன் இரண்டாம் பாகம் இப்பொழுது உருவாகி ரிலீஸுக்கு தயாராகி உள்ளது, அதன்படி படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளிவரவுள்ளது.
இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லர் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. ஆம், படக்குழு வெளியிட்டுள்ள அந்த போஸ்டரில் ட்ரெய்லர் வரும் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
புதிய போஸ்டரில், ஜோக்கர் தனது காதல் ஆர்வலரான ஹார்லி க்வின் உடன் கிளாசிக் பால்ரூம் நடனம் ஆடுவதைக் காட்டுகிறது. why so serious என சீரியஸாக டயலாக் கூறும் படத்தின் நாயகன் ரொமான்ஸாக போஸ் கொடுத்திருக்கிறார்.
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…