மில்லியன் டாலர்களை வசூல் செய்து கொடுத்த நடிகர்களுடன் இணைகிறார் !!!! தல !!
வெளி நாட்டில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பும் மற்றும் எதிர்பார்ப்பும் அதிக அளவில் இருக்கிறது.வெளி நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,கமல் ஹாசன், விக்ரம், சூர்யா,விஜய் ஆகியோரின் படங்கள் அதிக வசூல் சாதனை படைக்கும் என்று பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ,கமல் ஹாசன்,விஜய் ஆகியோருக்கு வெளி நாட்டிலும் அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். இவர்களின் படங்கள் பல மில்லியன் டாலரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும் வரும் 10 ந் தேதி தமிழில் வெளியாகும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் அஜித்தும் இந்த வரிசையில் இணைவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.