#HBDVadivelu 15 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த சுந்தர்.சி – வடிவேலு! கூட்டணியில் என்ன ஸ்பெஷல்?
வடிவேலு மற்றும் சுந்தர் சி இருவருடைய கூட்டணி 15 ஆண்டுகளுக்கு பிறகு 'கேங்கர்ஸ்' படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

சென்னை : இன்று பலரும் ஒருவருடைய காமெடியை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறோம் என்றால் அது வடிவேலு காமெடி என்றே சொல்லலாம். அவருடைய காமெடி காட்சிகள் காலங்கள் கடந்தாலும், அழியாத ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வடிவேலுவுடைய காமெடி படங்கள் எத்தனையோ இருக்கிறது. ஆனால், அதில் பலருடைய பேவரைட் கதாபாத்திரம் என்றால் வின்னர் படத்தில் அவர் நடித்த ‘கைப்புள்ள’ கதாபாத்திரம் தான்.
இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி கொடுத்தது இயக்குனர் சுந்தர் சி தான். இந்த படத்தில் நடிக்கும் போது உண்மையாகவே வடிவேலுவுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. அதனையே அப்படியே படத்தில் கால் உடைந்தது போல நடித்து மக்களை சிரிக்க வைத்தார். அந்த சமயம், வின்னர் படம் பெரிய அளவில் வெற்றிபெற வடிவேலு தான் முக்கிய காரணம் என்று கூட சொல்லலாம்.
அந்த அளவுக்கு தன்னுடைய முழு நகைச்சுவை பாணியை இந்த படத்தில் காண்பித்து எப்படி எப்படியெல்லாம் மக்களை சிரிக்க வைக்கலாமோ அப்படி சிரிக்க வைத்து இருந்தார். இந்த படத்தைப்போல சுந்தர் சியுடன் அவர் இணைந்து நடித்த தலைநகரம் படத்திலும், அவருடைய காமெடி காட்சிகள் பெரிய அளவில் பேசப்பட்டது. படத்தில் அவருடைய நாய் சேகர் கதாபாத்திரமும், கைப்புள்ள கதாபாத்திரத்தை போல பெரிய அளவில் பேசப்பட்டது.