நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் வெளியாகியுள்ள ஜோ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று 4-வது வாரமாக திரையரங்குகளில் ஓடிகொண்டு இருக்கிறது. ஹரிஹரன் ராம் என்பவர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் காதல் கதையம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மாளவிகா மனோஜ், பவ்யா திரிகா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தின் கதை அருமையாக இருந்த காரணத்தால் படம் மக்களுக்கு பிடித்துப்போக படத்தை கொண்டாடி வருகிறார்கள். படம் பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.
ஜோ திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?
விமர்சன ரீதியாக பெரிய வெற்றிபெற்றுள்ள இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அதன்படி, படம் வெளியாகி தற்போது வரை தமிழகத்தில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவலை பார்க்கலாம். தமிழகத்தில் மட்டும் இந்த ஜோ திரைப்படம் 6.5 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
மேலும், ஜோ திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்து இருப்பதால் அந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான ஹாட்ஸ்டார் கைப்பற்றியது. படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவுள்ளது. எனவே, திரையரங்குகளில் படம் பார்க்காதவர்கள் ஓடிடியில் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமேரிக்கா : தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து வாக்கு…
வாஷிங்க்டன் : அமெரிக்க தேர்தல் நேற்று மாலை தொடங்கிய நிலையில், இன்று காலை (இந்திய நேரப்படி) தேர்தல் நிறைவடைந்து வாக்கு…
அமெரிக்கா : அமெரிக்காவின் 47வது அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கி,…
சென்னை : நடைபெற்று வரும் அமெரிக்க தேர்தல் நிறைவடைந்து தற்போது வாக்கு எண்ணிக்கையும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.…
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…