மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார். அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் .
இருவருக்கும் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகரும் ,இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி வித்தியாசமான பாணியில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் . அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு மூக்குத்தி அம்மனாக நடித்துள்ள நயன்தாரா ஆசி வழங்குவது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார் . இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது .ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் திரைப்படம் நவம்பர் 14-ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில், அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜனவரி…
டெல்லி : கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரின் போது ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது. …
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) புதிய தலைவராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்…
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…