நயன்தாராவிற்கு போட்டியாக களமிறங்கும் ஜோதிகா!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொலையுதிகாலம் திரைப்படம் காப்புரிமை பிரச்சனையால், ரிலீஸாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில், இப்படம் ஹிந்தியில் காமோஷி என்ற டைட்டிலுடன், தமன்னா மற்றும் பிரபு தேவா நடிப்பில் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக தமிழில் இந்த படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதனையடுத்து, இப்படம் ஜூலை 26-ம் தேதி வெளியாகும் என திரைத்துறை வட்டாரங்கள் அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படம் ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. அப்படி வெளியானால், ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் ஜோதிகாவின் ஜாக்பாட் படம், நயன்தாராவின் கொலையுதிர்காலம் படத்திற்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.