நடிகர் தனுஷுக்கு அடித்த ஜாக்பாட் !
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான காலா டீசருக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது காலா படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 75 கோடி பட்ஜெட்டில் உருவான காலா படத்தை லைகா நிறுவனம் 125 கோடி ருபாய்க்கு வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.