தீபாவளி அன்று வெளியாகும் “JigarthandaDoubleX”….அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!
ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகம் மிக்பெரியை வெற்றியடைந்த நிலையில், இரண்டாவது பாகத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிவருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவன் லாரன்ஸ் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இப்படத்திற்கு திருநாவுக்கரசு என்பவர் ஒளிப்பதிவு செய்ய, படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் குட்டி டீசர் கூட கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
A SHOT Update from team #JigarthandaDoubleX, today at 4PM.#aSHOTupdate @offl_Lawrence @iam_SJSuryah @DOP_Tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers @onlynikil pic.twitter.com/44CzWdH0Tt
— karthik subbaraj (@karthiksubbaraj) May 15, 2023
இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாகும் என முன்னதாக படக்குழு தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, தற்போது அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
” Jigarthanda DoubleX ”
Here’s A SHOT Update https://t.co/rdTgtsu5Rd#DoubleXDiwali#JigarthandaDoubleX
@iam_SJSuryah @DOP_Tirru @Music_Santhosh @kaarthekeyens @stonebenchers @kathiresan_offl @dhilipaction@kunal_rajan pic.twitter.com/U8X1bMdIrG
— Raghava Lawrence (@offl_Lawrence) May 15, 2023
அதன்படி, இந்த திரைப்படம் வரும் நவம்பர் 12-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என சின்ன டீஸருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.