Jigarthanda On Netflix [file image]
டிசம்பர் 8-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” திரைப்படம்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் 2014 ஆம் ஆண்டு ஜிகர்தண்டா என்ற வெற்றி திரைப்படத்தை வழங்கினார். தற்போது, ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பெயரில் வேறொரு ஜெனரில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற பிளாக் பஸ்டர் படத்தை வழங்கியுள்ளார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் சாக்கோ, பவா செல்லதுரை, இளவரசு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் மக்களுக்கு தீபாவளி விருந்தகாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.
வெளியான நாளில் இந்த இப்போது வரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதைப்போல வசூலிலும் படம் கலக்கி வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றிப்படமாகவும் மாறியுள்ளது.
இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
இவ்வாறு, திரையரங்குகளில் கொண்டாடப்பட்ட ஜிகர்தண்டா – டபுள் எக்ஸ் திரைப்படம், தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் டிசம்பர் 8, 2023 அன்று பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா – லாரன்ஸ் தவிர , நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் படத்தில் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் & ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…