இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்த படத்தின் முதல் பாகத்தை போல இரண்டாவது பாகமமம் அருமையாக இருப்பதால், ரசிகர்கள் மத்தியில்பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று இன்றுடன் 5வது நாட்களாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஷீன் டாம் சாக்கோ, நிமிஷா சஜ்ரியன், விது உள்ளிட்ட பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
படம் 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், கண்டிப்பா அதனை தாண்டி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த படத்தின் 4 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் படத்தை மிஞ்சியதா ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ? முதல் நாள் வசூல் விவரம் இதோ
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
அந்த தகவலின்படி, முதல் நாளில் உலகம் முழுவதும் 1.75 கோடி வரை மட்டுமே வசூல் செய்தது. ஆனால், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அதற்கு அடுத்த நாளான இரண்டாம் நாளில் ரூ.5.21 கோடி வசூலித்துள்ளது. மூன்றாம் நாளில் ரூ.7.4 கோடி வசூலித்திருக்கும் நிலையில், 4வது நாளான நேற்று மட்டும் ரூ.7.10 வசூலித்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் இதுவரை (4 நாளில்) ரூ.22 கோடியை தாண்டியுள்ளது என்றும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 30 கோடியை எட்டிருக்கும் என கூறப்படுகிறது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…