ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஹீரோயின் அழகா இல்லையா? கொந்தளித்த கார்த்திக் சுப்புராஜ்!

karthik subbaraj and nimisha sajayan

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக தினமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை படம் உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன், ஷைன் டாம் சாக்கோ, இளவரசு உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

படத்தில் நடித்த எல்லா பிரபலன்களுடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிமிஷா சஜயன் கதாபாத்திரமும் அவருடைய நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. படத்தை பார்த்த பலரும் நிமிஷா சஜயன் ராகவா லாரன்ஸ்க்கு இணையாக தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என கூறி பாராட்டி வருகிறார்கள்.

இதற்கிடையில், படம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் செய்தியாளர்களை சந்தித்து ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பவர்களுக்கும், படத்தை பார்த்து கொண்டாடி வரும் மக்களுக்கும் நன்றிகளை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு கார்த்திக் சுப்புராஜ் கடுப்பாகியுள்ளார்.

 செய்தியாளர் கார்த்திக் சுப்புராஜிடம் ” படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்துள்ள நிமிஷா சஜயன் அவருக்கு இணையாக நடித்துள்ளார். பார்ப்பதற்கு சுமாராக இருக்கிறார் அவ்வளவு அழகு இல்லை அவரை எதற்காக எந்த விஷயத்தை வைத்து படத்தில் நடிக்க வைக்கலாம் என்று தேர்வு செய்தீர்கள்? என்ற கேள்வியை அனைவருடைய முன்னிலையில் வைத்தார்.

பைக்கால் வந்த வினை…தனுஷ் மகனுக்கு அபராதம் விதிப்பு!

இந்த கேள்விக்கு சற்று கடுப்பான இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் ” முதலில் அவுங்க அழகாக இல்லை என்று நீங்கள் சொல்லியதே தவறு. உங்களுடைய கண்களுக்கு அப்படி தெரிகிறது என்று நான் நினைக்கிறன். ஒருத்தர் அழகா இருக்காங்க இல்லை என்று சொல்ல யாருக்குமே உரிமை கிடையாது.ஆனால், நீங்கள் இப்படி சொன்னது பெரிய வன்முறை” என பதில் கொடுத்தார்.

இப்படி கார்த்திக் சுப்புராஜ் பேசியதை பார்த்த ரசிகர்கள் பலரும் தரமான பதில் என அவரை பாராட்டி வருகிறார்கள். மேலும்,  நிமிஷா சஜயன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடிப்பதற்கு முன்பு சித்தார்திற்கு ஜோடியாக சித்தா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் பெரிய வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation