ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், மற்றும் நிமிஷா சஜ்ரியன், ஷீன் டாம் சாக்கோ, பவா செல்லதுரை, இளவரசு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. இந்த படம் மக்களுக்கு தீபாவளி விருந்தகாக அமைந்துள்ளது என்றே சொல்லலாம்.
வெளியான நாளில் இந்த இப்போது வரை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதைப்போல வசூலிலும் படம் கலக்கி வருகிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்த படம் வெற்றிப்படமாகவும் மாறியுள்ளது. இந்நிலையில், படம் உலகம் முழுவதும் மற்றும் தமிழகத்தில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற விவரம் குறித்த தகவல் தற்போது கிடைத்திருக்கிறது.
தளபதி 68 படக்குழுவுக்கு கண்டிஷன் போட்ட விஜய்! என்ன தெரியுமா?
அதன்படி, உலகம் முழுவதும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் 52 கோடி வசூல் செய்துள்ளது. அதைப்போல படம் தமிழகத்தில் மட்டும் 33 கோடிகள் வசூல் செய்து இருக்கிறதாம். வெளியான 10-நாட்களில் 33 கோடி தமிழகத்தில் வசூல் செய்துள்ளது என்றால் அது சாதாரண விஷயமே இல்லை. இப்படி வசூல் செய்ததற்கு காரணம் படத்தின் கதை தான் என்றே சொல்லலாம்.
கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படம் சரியான விமர்சனத்தை பெறாத நிலையில், அவருக்கு அந்த படம் தோல்வி படமாக அமைந்தது. இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவதற்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ பெரிய உதவியை செய்து இருக்கிறது. அந்த அளவிற்கு பெரிய ஹிட் படமாக அவருக்கு அமைந்துள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்துடன் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படமும் அதே தினத்தில் வெளியானது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. வெளியான நாளிலிருந்து தற்போது வரை படம் உலகம் முழுவதும் 30 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.