ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் – ஜப்பான் ஐ தட்டி தூக்கிய நெட்பிளிக்ஸ்! எத்தனை கோடிகளுக்கு தெரியுமா?

jigarthanda doublex vs japan

இந்த ஆண்டு 2023 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படமும் ராகவா லாரன்ஸ் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படங்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக ஹிட்டானது .

ஆனால், இதில் ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த திரைப்படம் எப்போது  ஓடிடியில்  வெளியாகும் என்பதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. எனவே, இந்த இரண்டு படங்களும் எத்தனை கோடிகளுக்கு ஓடிடியில் விற்கப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஜப்பான்

கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றாலும் படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 20 கோடி கொடுத்து வாங்கிவிட்டது. எனவே, இந்த படம் ஓடிடியில் மட்டும் 20 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஜப்பான் திரைப்படம் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இணையத்தில் லீக்கான SK21 காட்சி…சிவகார்த்திகேயனுக்கு பெண் குழந்தை.?

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 22 கோடிகள் கொடுத்து இந்த திரைப்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் வரும் டிசம்பர் 8-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்