JigarthandaDoubleX [File Image]
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, இன்றுடன் 6வது நாளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
குறிப்பாக, இந்த படத்தை பார்த்த தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர் பாராட்டுகளை குவித்தனர். அந்த வகையில், நடிகர்களில் தனுஷ் மற்றும் சிம்பு வாழ்த்து தெரிவித்த நிலையில், தனது தீவிர ரசிகரின் படத்தை கொண்டாடிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவை வர்ணித்து பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்பொழுது, இந்த படத்தின் 5 நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த தகவலின்படி, இப்படம் ரூ.35 கோடியை தாண்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அதள பாதாளத்திற்கு சென்ற ‘ஜப்பான்’ திரைப்படம்! கவலைக்கிடமான வசூல் நிலவரம்?
தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.77 கோடி வசூல் செய்திருக்கலாம் எனவும், தெலுங்கில் ரூ.3.95 கோடி, கர்நாடகாவில் ரூ.1.65 கோடி, கேரளா ரூ.1.05 கோடி மற்றும் வெளிநாடு ரூ.4.35 கோடி (₹.524K) என 5 நாட்களில் உலகம் முழுவதும் மொத்தம் ரூ.35 கோடியை வசூலித்திருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.
சந்தோஷத்தின் உச்சியில் சாக்ஷி அகர்வால்? எல்லாத்துக்கும் காரணம் கவர்ச்சி போட்டோ தான்…
நடிகர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா தவிர, இந்த திரைப்படத்தில் ஷீன் டாம் சாக்கோ, நிமிஷா சஜ்ரியன், விது உள்ளிட்ட பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…