மண்ணை கவ்விய ஜப்பான்…விண்ணை தொட்ட ஜிகர்தண்டா டபுள் X.!!
ராகவா லாரன்ஸ், S.J சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் X திரைப்படமும், ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் ஜப்பான் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவான ரெய்டு படமும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று (நவ 10) வெள்ளிக்கிழமை 3 தமிழ் திரைப்படங்கள் வெளியானது.
இதில், ஜிகர்தண்டா டபுள் X படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததாகவும், ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஜப்பான் படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையில், எந்தவித எதிர்பார்ப்பு இல்லாமல் வெளிவந்த ‘ரெய்டு’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த திரைப்படத்தை பார்த்த பலரும் படம் நன்றாக இருப்பதாகவும், இறுக்கப்பற்று படத்திற்கு பிறகு விக்ரம் பிரபுவுக்கு மீண்டும் ஒரு வெற்றிப்படம் எனவும் கூறி வருகிறார்கள்.
தீபாவளி 2023 ஸ்டார்ட்! நாளை வெளியாகும் 3 படங்கள்!
ஜிகர்தண்டா டபுள் X
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளிவந்த திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதற்கு முன்னதாக, இந்த படத்தின் முதல் பாகம் (ஜிகர்தண்டா) கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது.
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்) என்ற பெயரில் அதனுடைய இரண்டாவது பாகத்தை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதல் பாகத்தின் கதைக்கும் இரண்டாம் பாகத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லை. படத்தின் தலைப்பு மட்டும் ஒரே மாதிரியாக இருந்தாலும், இரண்டும் வேறுமாதிரியான கதையம்சம் கொண்டது.
இதுதான் சினிமா! ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ எப்படி இருக்கு? ட்விட்டர் விமர்சனம் இதோ!
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள். விமர்சனத்தை வைத்து பார்க்கையில், இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆகும் என கூறப்படுகிறது. அந்த அளவிற்கு படம் முதல் பாகத்தை மிஞ்சுவிட்டதாகவே பலரும் கூறி வருகிறார்கள்.
ஜப்பான்
எழுத்தாளரான ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் நடிகை அனு இமானுவேல், இயக்குனர் விஜய் மில்டன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
நகை கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாதி ஆக்சன் காட்சிகளுடன் சென்றாலும், 2வது பாதி முழுக்க எமோஷனலாகவும் செல்கிறது. ஃப்ளாஷ்பேக் காட்சிகள் மட்டும் சற்று தொய்வை ஏற்படுத்தி இருந்தாலும், மற்றபடி குறையில்லை. அதிலும் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சிகள் பக்காவாக இருந்தது என்றே சொல்லாம்.
தீபாவளி ஜப்பான் பட்டாசு வெடித்ததா…நமத்து போனதா? திரைவிமர்சனம்…
படத்தில் அழுத்தமான கதை மற்றும் வலுவான கதாபாத்திரங்கள் இல்லை என்பதாலும், திரைப்படம் பல அதிரடி காட்சிகளைக் கொண்டிருந்தாலும், பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பாக அமையவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஆனால், கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கட்சிதமாக நடித்து முடித்துள்ளார்.
வெற்றியை கைவிட்ட கார்த்தி?
எப்பொழுதும் விஜய்-அஜித் திரைப்படங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாவது வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் தீபாவளியை முன்னிட்டு வெற்றியி கண்டுள்ளது. அதுக்கு எடுத்துக்காட்டாக கைதி, சர்தார் திரைப்படமும் சொல்லாம்.
அந்த வகையில், ஜப்பான் திரைப்படம் மூலம் மூன்றாம் வெற்றியை தக்க வைத்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த திரைப்படம் கைகொடுக்க வில்லை என்று தெரிகிறது. எது என்னவோ சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்.