ஜிகர்தண்டா – 2 அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாபி சிம்ஹா , சித்தார்த், குரு சோமசுந்தரம், லட்சுமி மேனன், கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜிகர்தண்டா”. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது.
இந்த படத்தை பைவ் ஸ்டார் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் தயாரித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசைமைத்திருந்தார்.
இந்நிலையில், படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது. அதன்படி, தற்போது அதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
“ஜிகர்தண்டா” படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடும் விதமாகச் சிறப்பு வீடியோ ஒன்றை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
And….. pic.twitter.com/pKL2Qi4oks
— karthik subbaraj (@karthiksubbaraj) August 1, 2022
அத்துடன் வீடியோவின் இறுதியில் “ஜிகர்தண்டா – 2′ படத்துக்கான எழுத்துப்பணிகள் தொடங்கிவிட்டதாக அறிவித்துள்ளார். விரைவில் படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.