அடுத்தடுத்து 3 படங்களை கமிட் செய்த ஜெயம் ரவி! எந்த நிறுவனம்?!!
தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் சமீபத்தில் அடங்கமறு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து 24வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார்.
ஸ்கிரீன் ஸீன்ஸ் எனும் புதிய பட நிறுவனம் தான் அடுத்து தயாரிக்க இருக்கும் மூன்று படத்திலும் நடிகர் ஜெயம் ரவியை ஹீரோவாக கமிட் செய்துள்ளது. இந்த படங்கள் பற்றிய அறிவிப்பு தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DINASUVADU